கெஹெலிய மற்றும் குடும்பத்தினர் மீதான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன.

இக்குற்றப்பத்திரிகைகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் அனைவரும் தலா ரூ.50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ.10 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதோடு, அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களைப் பெற்றுத் தொகுக்கவும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதுடன், இந்த வழக்கு, இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply