கேப்டன் பதவியில் தோனி.. ருதுராஜ் நீக்கம்.. சென்னை அணியில் மெகா ட்விஸ்ட்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள நிலையில், அந்த போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கையில் காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. 

அதன் காரணமாக மாற்று கேப்டனாக தோனியை நியமிப்பது குறித்து சிஎஸ்கே அணி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சனிக்கிழமை விளையாட உள்ளது. இந்த போட்டி மாலை 3:30 மணிக்கு நடைபெற உள்ளது. 

இந்தப் போட்டிக்கு முன்பாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாட தயாராக வாய்ப்பு இல்லை என்றே சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசுகையில், “ருதுராஜின் கையில் ஏற்பட்டு இருக்கும் காயம் சற்று மோசமாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு நாளும் அது முன்னேறி வருகிறது. 

விரைவில் அவர் விளையாடுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாளை சனிக்கிழமை அன்று அவர் முழு அளவில் தயார் ஆவார் என நாங்கள் நம்புகிறோம். ஆனால், உறுதியாக சொல்ல முடியாது.” என குறிப்பிட்டிருக்கிறார்.

அப்போது ருதுராஜ் விளையாடவில்லை என்றால் தோனி கேப்டனாக பங்கேற்பாரா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “எனக்கு அது உறுதியாகத் தெரியவில்லை. 

அதைப் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் ருதுராஜ் இது பற்றி சிந்தித்து இருப்பார்கள். ஆனால், எங்கள் அணியில் ஒரு இளம் வீரர் இருக்கிறார். அவர் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.”

“அவர் கேப்டனாக சிறப்பான பணியை செய்வார். ஆனால், அது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. அவர் அந்தப் பணியில் சில அனுபவங்களை வைத்துள்ளார். எனவே, அவர் அதை செய்யக்கூடும். 

ஆனால், என்னால் இதை உறுதியாக சொல்ல முடியாது” என்றார் மைக் ஹசி. சூசகமாக தோனி கேப்டன்சியை ஏற்க வாய்ப்பு உள்ளதாக சுட்டி காட்டி இருக்கிறார் மைக் ஹசி.

2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் தோனி. 2024 ஆம் ஆண்டு தனது கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகி இருந்தார். 

அப்போது இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் வசம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியில் தோனி ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை தான் விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. இந்த நிலையில் தான் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கையில் காயம் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள

News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!

JOIN NOW


🎧 Listen Live on Aha FM – Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!