கொத்மலையில் மற்றுமொரு விபத்து – 17 பேர் காயம்

 

நுவரெலியாவில் இருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த  வான் ஒன்று  விபத்திற்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். கொத்மலை பேருந்து விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள ப்ளூம்ஃபீல்ட் எஸ்டேட் பகுதியில் 50 அடி பள்ளத்தாக்கில்  குறித்த வான் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ராஜாங்கனை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலா சென்றிருந்தவா்களே   இவ்வாறு  விபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் காயமடைந்தவா்கள்  கொத்மலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொத்மலை  காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!