சத்தீஸ்கர் என்கவுன்டர்களில் 22 பிரிவினைவாதிகள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிரிவின் பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் இன்று (20) நடந்த தனித்தனி மோதல்களில் குறைந்தது 22 பிரிவினைவாதிகள் என்கவுன்டரில் கொலலப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில், துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரரும் உயிழந்துள்ளார்.

கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பிஜாப்பூரில் பதினெட்டு பிரிவினைவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் எண்ணிக்கை 20 ஆக உயரக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பீஜாப்பூர் என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் 18 உடல்களையும், கான்கர் மற்றும் நாராயண்பூர் மாவட்டங்களின் எல்லைகளில் உள்ள காடுகளில் இருந்து நான்கு உடல்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள காடுகளில் இன்னும் என்கவுண்டர் நடந்து வருவதாக பஸ்தர் பொலிஸார் தெரிவித்தனர்.

பிஜாப்பூரில் உள்ள கங்கலூர் பகுதியில் பிரிவினைவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு சென்றபோது, ​​கிளர்ச்சியாளர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதற்குப் படையினரும் பதிலடி கொடுத்ததாக பொலிஸழர் தெரிவித்தனர்.

காலை 7 மணி முதல் பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.

காட்டில் மூத்த பிரிவினைவாதிகள் போராளிகள் குழுவை படைகள் சுற்றி வளைத்துள்ளதாகவும், பிற்பகலில் மேலும் உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!