18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 57 ரன்கள் எடுத்தார்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றதுடன், ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.
கொல்கத்தா தரப்பில் மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 13வது ஓவரை மொயீன் அலி வீசினார்.
அந்த ஓவரின் 2வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்ததார். இதன் மூலம் அவர் சாதனை பட்டியல் ஒன்றிலும் இடம் பிடித்துள்ளார். அதாவது, ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரியான் பராக் இணைந்துள்ளார்.
ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள்
கிறிஸ் கெயில் – பந்துவீச்சாளர் ராகுல் சர்மா, 2012
ராகுல் தெவேதியா – பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், 2020
ரவீந்திர ஜடேஜா – பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல், 2021
ரிங்கு சிங் – பந்துவீச்சாளர் யாஷ் தயாள், 2023
ரியான் பராக் – பந்துவீச்சாளர் மொயீன் அலி, 2025
Stay in the loop – join us on WhatsApp for the latest updates!