சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு!

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 01ஆம் திகதி காலை 8.30 மணிஅளவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

விபத்தின்போது, அருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர மதுரை.யில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!