Last Updated : 10 May, 2025 07:52 PM
Published : 10 May 2025 07:52 PM
Last Updated : 10 May 2025 07:52 PM

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஃப்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எஃப்’ வரிசையில் கேலக்சி எஃப்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பு அம்சங்கள்:
- 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
- Exynos 1580 சிப்செட்
- ஆக்டா-கோர் சிபியூ
- 6ஜிபி / 8ஜிபி / 12ஜிபி ரேம்
- 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 5000 mAh பேட்டரி
- 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- 30 நிமிடங்களில் 65 சதவிதம் பேட்டரியின் சக்தியை சார்ஜ் செய்யலாம் என சாம்சங் கூறியுள்ளது
- கேலக்சி ஏஐ அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது
- பச்சை மற்றும் ஊதா வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்
- 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்
- இந்த போனின் ஆரம்ப விலை ரூ.27,999
FOLLOW US
தவறவிடாதீர்!