சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ , தனது 63 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் ஹான் காலமானார் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு சியோலில் உள்ள சாம்சுங் மருத்துவ மையத்தில் வியாழக்கிழமை (27) ஊர்வலத்துடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1962 ஆம் ஆண்டு பிறந்த ஹான், 1988 ஆம் ஆண்டு சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விஷுவல் டிஸ்ப்ளே பிரிவில் பணியாற்றத் தொடங்கினார்.
ஹான், 2022 ஆம் ஆண்டில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.