2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் ஒரு டிரில்லியன் ரூபாவையும் விஞ்சியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சிவலி அருக்கோட தெரிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,
அரசாங்கம் நிர்ணயித்த முழு ஆண்டு இலக்கை (ரூ.2.115 டிரில்லியன்) நாங்கள் தாண்டிவிடுவோம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.