சுற்றுலா பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று!

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (13) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரில் பல்லேகலையில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதன்படி, இந்தத் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், இருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி

Leave a Reply