சோபியானில் பாதுகாப்புப் படையின் துப்பாக்கிசூட்டில் பயங்கரவாதிகள் மூவர் பலி!

சோபியானில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிவரும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வரும் இந்திய ராணுவம், அவர்களது தலைக்கு 20 லட்சம் ரூபாய் வெகுமதியும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதன்போது மறைவிடம் ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் இறங்கியுள்ளனர்.

இரு தரப்பிலும் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!