அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரிகள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் இடையே இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
இந்த வரிகளை விதிப்பதற்கான பின்னணி மற்றும் அடிப்படை, சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நம்மைப் போன்ற நாடுகள், இவ்வளவு பெரிய வரிகளை விதிப்பதால் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் ஆகியவை விரிவாக ஆராயப்பட்டன.
எழுந்துள்ள புதிய சூழ்நிலையின் அடிப்படையில் ஒரு நாடாக எவ்வாறு செயல்படுவது மற்றும் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீண்ட விவாதங்கள் நடைபெற்றன.