டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (29) நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியினால் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அணியானது பிளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

போட்டியில் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் ஏழு பந்துகளுக்குள் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியது கொல்கத்தாவின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 48 ஆவது போட்டியானதுடெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரபம்மானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற DC அணியானது பந்து வீச்சினை தேர்வு செய்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய KKR அணியானது முன்னணி வீரர்களின் நல்லதொரு துடுப்பாட்டத்துடன் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்கள‍ை குவித்தது.

கொல்கத்தா அணி சார்பில் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 44 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 36 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.

205 என்ற இலக்கினை நோக்கி பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய DC அணியானது ஏழு ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களை எடுத்து தடுமாறியது.

எனினும், நான்காவது விக்கெட்டுக்காக ஃபாஃப் டு பிளெசிஸ் (62) மற்றும் அக்சர் படேல் (43) ஜோடி சேர்ந்து 76 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இருப்பினும், நரைன் (3/29) ஒரு முக்கியமான கட்டத்தில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி DC இன் சேஸிங்கை முறியடித்தார்.

அதன்படி, DC அணியால் 20 ஓவர்களின் நிறைவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

அருண் ஜெட்லி மைதானத்தில் DC அணி சந்தித்த நான்கு ஆட்டங்களில் மூன்றாவது தோல்வியாகும் இது.

இந்த வெற்றியின் மூலம், நடப்பு சாம்பியனான KKR அணி, ஒன்பது புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருந்தாலும், பிளேஆஃப் நம்பிக்கையை மீண்டும் பெற்றது.

DC அணி 12 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களில் நீடித்தது.

Image

நன்றி

Leave a Reply

error: Content is protected !!