இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் போட்டியிடவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.
இதேவேளை, இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தனது கருத்தை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்ட முடிவை விராட் கோலி திரும்பப் பெற வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸின் ( west indies) முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் தேவை எனவும் அவர் நிச்சயம் சம்மதிப்பார் எனவும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதில்லை எனவும் அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையின் மீதமுள்ள காலத்தில் நிச்சயம் 60 க்கு மேல் சராசரியான ஓட்டங்களை எடுப்பார் எனவும் பிரையன் லாரா தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.