டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தில் குறைந்தது நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மோப்ப நாய்களின் உதவியுடன் 300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது குறித்த இரவு விடுத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், விபத்தில் 500 முதல் 1,000 பேர் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.