தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு: ஒரு பவுனுக்கு ரூ.840 ஏற்றம்! | gold price today rise by rupees 840 per sovereign

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 1) பவுனுக்கு ரூ.840 என அதிரடி ஏற்றம் கண்டுள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.120 என குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்தது வந்தது. இதனால் ஜூன் 23 முதல் 30-ம் தேதி வரையிலான நாட்களில் பவுனுக்கு ரூ.2,560 என தங்கம் விலை குறைந்திருந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை அதிரடி ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020-க்கு விற்பனையாகிறது. அதேபோல பவுனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.71,320-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

24 காரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.114 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 என விலை உயர்ந்து ஒரு கிராம் 7,440-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி 1 கிராம் ரூ.120-க்கு விற்பனை ஆகிறது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!