சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 8,805 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440 ஆகவும் விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது, நேற்று காலையில் பவுனுக்கு ரூ.120, மாலையில் ரூ.720 என மொத்தமாக, நேற்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, 8,855-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 8,805 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440 ஆகவும் விற்பனை ஆகிறது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.109 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 9 ஆயிரமாகவும் மாற்றமின்றி இருந்தது.