பாகிஸ்தானுக்கு எதிரான இன்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அறிமுக வீரர் மொஹமட அப்பாஸ் புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். தனது கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் மொஹமட் அப்பாஸ் 26 பந்துகளுக்கு முகம்கொடுத்து 52 ஓட்டங்களை பெற்றார்.
இதற்கமைய 21 வயதான அப்பாஸ் கன்னி போட்டியில் வேகமான அரைச் சதம் பெற்ற வீரர் என்ற சாதனையை புதுப்பித்துள்ளதுடன் இதற்கு முன்னர் குறித்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்த இந்திய வீர் குர்னல் பாண்டியாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
2021ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியொன்றில் 26 பந்துகளில் குர்னல் பாண்டியா அரைச்சதம் பெற்றார்.
இதேவேளை நியுசிலாந்து அணியில் விளையாடிய குறித்த மொஹமட் அப்பாஸின் தாய்நாடு பாகிஸ்தானாகும். நியுசிலாந்தின் நெபியரில் இன்று இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நியுசிலாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.