திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருடாந்திர இடமாற்றத் திட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்ட இடமாற்றங்கள் முறைகேடான வகையில் குறித்த இடமாற்றங்கள் நடைபெற்றிருப்பதாகவும் அதுதொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

வழங்கப்பட்ட குறித்த இடமாற்றங்களை உடன்  நிறுத்தி அதனை அரசு மீழப்பெற வேண்டும் என்பதே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களது கோரிக்கையாக இருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆரதவு தெரிவிக்கும் முகமாக  திருகோணமலை பட்டணமும் சூழலும் பிராந்திய சாசனரக்ஷக பல மண்டலத்தின் பெளத்த துறவிகளும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!