துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்!

அனுராதபுரம், திரப்பனே, கல்குலம பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் மிஹிந்தலையைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் இந்த சம்பவம் குறித்து திரப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!