துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (15) உக்ரேன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா- உக்ரைன் இடையே போர் இடம்பெற்று வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இன்று (15) நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என உக்ரேனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து ”மே 15ம் திகதி வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக தான் காத்திருக்கப் போவதாகவும்,  தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்  எனவும் ஜெலன்ஸ்கி  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று ( 15) உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வுள்ளது.

எவ்வாறு இருப்பினும் குறித்த பேச்சுவார்த்தைக்கு  புடின்  தனது பிரதிநிதிகளை  அனுப்பி வைக்கவுள்ளதாக, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இது குறித்து, உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”ரஷ்யா போரையும், கொலைகளையும் நீட்டித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தலைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமைதி மற்றும் ராஜதந்திரத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி” இவ்வாறு பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!