தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது

 

பூசா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளரின் கொலை தொடா்பில்  தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேகநபா்  போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள   அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது, குறித்த சந்தேகநபா் காலி மற்றும் அம்பலாங்கொடை காவல்துறைப்பிரிவுகளில்  இடம்பெற்ற ஏராளமான கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடா்பில்  தேடப்பட்டு வந்தவா் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.   கைது செய்யப்பட்ட சந்தேக நபர்   மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை  காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்

நன்றி

Leave a Reply

error: Content is protected !!