இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (18) அதிகாலை 5:59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 விண்கலத் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ (ISRO), இன்று PSLV-C61 மூலம் EOS-09 என்ற 101ஆவது
விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
குறித்த விண்கலம் 4 கட்டங்களாக செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது அதில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
232 வது கிலோமீட்டர் தொலைவில் விண்கலம் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பான ஆய்வுக்கு பின்னர் விரிவான அறிக்கை வழங்கப்படும் என இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த விண்கலத்தில் சரியாக 8 நிமிடம் 13 செக்கன்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.