மதுரை விமான நிலையத்தில், விஜய்க்கு சால்வை போட வந்த தொண்டரை பார்த்து துப்பாக்கியை காட்டி பாதுகாவலர் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துவிட்டு கொடைக்கானலில் இருந்து நடிகர் விஜய் திரும்பிய நிலையில், அவரை பார்க்க விமான நிலையத்தில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதுடன், ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகின்றார்.
ஒருபுறம் படப்பிடிப்பில் நடித்து வரும் விஜய் மறுபுறம் கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடைகானலில் ஜனநாயகன் திரைப்பட சூட்டிங்கிற்காக மதுரை விமான நிலையம் வந்து சென்றார்.
அப்போது விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விஜய் கொடைக்காணலில் தாண்டிக்குடியில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
சூட்டிங் முடிந்ததையடுத்து இன்று அவர் மதுரை விமான நிலையத்துக்கு காரில் வந்து, அதன்பின்னர் அங்கிருந்து விமான மூலம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார்.
அங்கு விஜய்யை பார்க்க வேண்டும் என்று திரண்டிருந்த தொண்டர்கள் விஜய் வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். விஜய்யும் காரில் இருந்து இறங்கியதும் தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.
அப்போது மதுரையை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இன்பராஜ் என்பவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க வேண்டும் என்று நினைத்து திடீரென பாதுகாவலர்களை தாண்டி விஜய்யை நெருங்கி வந்தார்.
அவர் சால்வையை விரிக்க நினைக்கும் நேரத்தில் பாதுகாவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் தலை மீது வைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Stay in the loop – join us on WhatsApp for the latest updates!