நாட்டில் ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பு


நாட்டில் ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


நாட்டில், ஒவ்வொரு நிமிடமும் 06 அல்லது 08 பேர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு விபத்துக்களில் சிக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (07) இடம்பெற்ற தேசிய விபத்து தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 


இதன் அடிப்படையில், மாதமொன்றுக்கு  சுமார் ஆயிரம் பேர் வரையில் மரணிப்பதாகவும்,  15 வயதுக்கும் 45 வயதுககும் இடைப்பட்டவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆண்டொன்றுக்கு 3000 பேர் வரை தங்களது உயிரை தாங்களே மாய்த்துக்கொள்கின்றனர் எனவும்  தெரிவித்தார். 

தொடர்ந்தும் அமைச்சர் தெரிவிக்கையில், 


வெளி நோயாளர் பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் சேர்க்கை அதிகமாக உள்ளது. இது சுகாதார சேவைகளுக்கு ஒரு தடையாகும் என்றார். ஜூலை 07 சாலை விபத்து தடுப்பு தினம்.


ஜூலை 08 அலுவலக விபத்துகளைத் தடுத்தல். ஜூலை 09 வீடுகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுத்தல். ஜூலை 10 நீரில் மூழ்கும் விபத்துகளைத் தடுத்தல். ஜூலை 11 பாடசாலை மற்றும் பாலர் பாடசாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!