வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில்முழ்கியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் கண்டி நாவலப்பிட்டியை சேர்ந்த 18 வயதான இளைஞரே மரணமடைந்துள்ளார்.
வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல்தடாகத்திற்கு தனது குடும்பத்துடன் வருகைதந்திருந்த இளைஞர் ஒருவர் நீச்சல்குளத்தில் இறங்கி குளித்துள்ளார்.
இதன்போது அவர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவன் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
மேலும் அவரது சடலம் செட்டிகுளம் பிரதேசவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.