நோர்வே செஸ் போட்டியில் 7வது முறையாக மேக்னஸ் பட்டம் வென்றுள்ளார்!

நோர்வே சர்வதேச ‘கிளாசிக்’ செஸ் போட்டியில், 7வது முறையாக மேக்னஸ் கார்ல்சன் பட்டம் வென்றுள்ளதுடன் உலக சாம்பியன் குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

நோர்வேயில், நடைபெறுகின்ற சர்வதேச செஸ் (‘கிளாசிக்’) தொடரின் இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து குகேஷ் விளையாடினார். இருப்பினும் சிறு சிறு தவறுகள் காரணமாக, குகேஷ் கருவானாவிடம் தோல்வியடைந்துள்ளார்.

இதேவேளை, 10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்துள்ளதுடன் கருவானா 15.5 புள்ளிகளுடனும் இரண்டாவது இடத்தையும் , குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!