பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பயிற்சியாளராக மைக் ஹெசன் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல் தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இன்று (21) அறிவித்துள்ளது.
லாகூரில் மூன்று போட்டிகளில் பங்களாதேஷை எதிர்கொள்ளும் 16 வீரர்கள் கொண்ட அணியில் முன்னாள் தலைவர் பாபர் அசாம், அனுபவமிக்க விக்கட் காப்பாளரும், துடுப்பாட்ட வீருமான மொஹமட் ரிஸ்வான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
துடுப்பாட்ட வீரர் சல்மான் அலி ஆகா தலைவராக அணியை வழி நடத்தவுள்ளார்.
சகலதுறை வீரரான ஷதாப் கான் துணை தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த வெள்ளை பந்து வீரர்களான ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில் தனது செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.