பட்ஜெட் விலையில் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | lava shark 5g smartphone launched in india at budget price specifications

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா நிறுவனம் ‘ஷார்க் 5ஜி’ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா ஷார்க் 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மாதம் இதே ஷார்க் ஸ்மார்ட்போனை 4ஜி மாடலாக வெளியிட்டது லாவா நிறுவனம். தற்போது அதன் 5ஜி மாடல் வெளியாகி உள்ளது. ஐபி54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் இந்த போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. லாவா ஷார்க் 5ஜி – சிறப்பு அம்சங்கள்:

  • 6.75 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • Unisoc T765 ஆக்டா-கோர் ப்ராஸசர்
  • 4ஜிபி ரேம்
  • 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • டைப்-சி சார்ஜர்
  • ஓடிஜி சப்போர்ட்
  • ட்யூயல் நானோ சிம்
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இந்த போனின் விலை ரூ.7,999

நன்றி

Leave a Reply

error: Content is protected !!