பட்ஜெட் விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | vivo y19 smartphone launched in india at budget price features

சென்னை: இந்தியாவில் விவோ Y19 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது இந்தியாவில் Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘Y’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்:

  • 6.74 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா
  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4ஜிபி / 6ஜிபி ரேம்
  • 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,500 mAh பேட்டரி
  • 15 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனின் ஆரம்ப விலை ரூ.10,499

நன்றி

Leave a Reply

error: Content is protected !!