அடிடாஸ் (Adidas ) நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் FIFA உலகக் கோப்பை காற்பந்தின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை (Final Pro Official Match Ball) இன்று வெளியிட்டுள்ளது.
குறித்த பந்து, இரண்டு அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இப் பந்தில் வழக்கமான பந்துகளில் காணப்படும் சிகப்பு நிறம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பிரம்மாண்டமான தங்க நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பந்தானது, போட்டியின் மாபெரும் பிரமாண்டத்தையும், அந்த இறுதிப் போட்டியின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றது என அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.