பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்டோர் கைது!

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார், சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அவசர சிறப்பு தேடுதல் நடவடிக்கை நேற்று (04) இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இந்த தேடுதல் நடவடிக்கைகளுக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!