0
அமராவதி: பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் 2வது மகன் காயமடைந்துள்ளார். பவன் கல்யாணின் 2வது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மார்க் ஷங்கரின் கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. பள்ளியில் மேலும் சில மாணவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்று வரும் மகனை பார்ப்பதற்காக பவன் கல்யாண் இன்று சிங்கப்பூர் செல்கிறார்.