எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்திர பஸ் கட்டண திருத்தம் இன்று (01) முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டிருந்தாலும், எரிபொருள் விலையில் ஏற்பட்ட திருத்தம் காரணமாக இன்று (01) அது அமலுக்கு வராது என்று நயோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.