பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு உறுதுணை: அமெரிக்கா உறுதி | US will support India as it hunts down Pahalgam attackers: Tulsi Gabbard

வாஷிங்டன்: ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பஹல்காமில் 26 இந்துக்களை குறிவைத்து கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகளும் ஆழ்ந்த அனுதாபங்களும். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீங்கள் வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிஹாரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “தாக்​குதலை நடத்​திய தீவிர​வா​தி​கள், சதித் திட்​டம் தீட்​டிய​வர்​கள் மிகக் கடுமை​யாக தண்​டிக்​கப்​படு​வார்​கள். கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு அவர்​களுக்கு தண்​டனை வழங்​கப்​படும். பயங்கரவாதத்தை வேரறுக்​கும் காலம் வந்​து​விட்​டது. 140 கோடி இந்​தி​யர்​களின் மனவலிமையை யாராலும் உடைக்க முடி​யாது.

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய பயங்கரவாதிகள் அடை​யாளம் காணப்​படு​வார்​கள். அவர்​களை தேடிக் கண்​டு​பிடித்து தண்​டனை வழங்​கு​வோம். எந்​தவொரு பயங்கரவாதியும் தப்ப முடி​யாது. பூமி​யின் கடைசிவரை அவர்​களை துரத்​து​வோம். பயங்கரவா​தி​களிடம் மீதமிருக்​கும் நிலத்தையும் அழிக்​கும் நேரம் வந்​து​விட்​டது. நீதி நிலை​நாட்​டப்​படும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!