இம்முறை இடம்பெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் குவாட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி லாகூர் குலான்டர்ஸ் அணி 3வது முறையாக சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற குவாட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன் அடிப்படையில் முதல் துடுப்பெடுத்தாடிய அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் ஹசன் நவாஸ் 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சஹீன் ஷா அப்ரிடி 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். இதன்படி 202 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லாகூர் குவாலண்டர்ஸ் அணி குசல் ஜனித் பெரோராவின் அதிரடியான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 19.5 நிறைவில் 4 விக்கட்டினை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.
குசல் ஜனித் பெரேரா இறுதிவரை ஆட்டமிழக்கமால் 31 பந்துகளில் 4 சிக்சர்கள் அடங்களாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவானார். பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் தனது 3 வெற்றியை லாகூர் குவாலண்டர் அணி பதிவு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.