பாகிஸ்தான் பொலிஸார் ஒரு மோசடி மையத்தில் நடத்திய சோதனையில் 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது.
பைசலாபாத் நகரில் செயல்பட்டு வரும் இந்த வலையமைப்பு குறித்து கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மையம் பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், போலி முதலீடுகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், இரண்டு இலங்கையர்கள், ஆறு பங்களாதேஷினர், இரண்டு மியான்மர் நாட்டவர்கள் மற்றும் ஒரு சிம்பாப்வே நாட்டவரும் அடங்குவர்.
149 பேரில் பதினெட்டு பேர் பெண்கள் என்று அந்த நிறுவனம் மேலும் கூறியது.
மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் முதல் முதலீட்டில் ஒரு சிறிய வருமானத்தைப் பெறுவார்கள் என்றும், பின்னர் பெரிய தொகைகளை ஒப்படைக்க வற்புறுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
சந்தேக நபர்கள் புதன்கிழமை (09) நீதமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 87 பேர் ஐந்து நாள் தடுப்புக் காவலில் வைக்க NCCIA-யிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் 62 சந்தேக நபர்கள் ஜூலை 23 வரை நீதிமன்ற காவலில் மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.