பால் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு!

பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம்  பால் தேநீர் மற்றும், பால் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புத்தாண்டு காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை சோதனையிடும் நடவடிக்கை நாடாளாவிய ரீதியில் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கருத்துத் தெரிவிக்கையில் புத்தாண்டு காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களை சோதனையிடும் நடவடிக்கை  நாடாளாவிய ரீதியில் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதம் முழுவதும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும், நாட்டின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிபிரிவுகளிலும் இந்த  திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுமார் 2000 ஆயிரம் பொதுசுகாதார பரிசோதகர்கள் இந்த கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும், குறிப்பாக அதிகளவில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும்,   அங்குள்ள ஹோட்டல்கள் உணவகங்கள்  பரிசோதனைக்குட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகைக்காலத்தில் விற்பனை  செய்யப்படும்  பட்சணங்கள்  இனிப்பு பண்டங்கள்  அவற்றை தயாரிப்பதற்டகு பயன்படுத்தப்படும்  எண்ணெனை  உற்பத்தி திகதி ஆகியவற்றின் தரம் தொடர்பாகவும்  ஆராயப்படும் எனவும், குறித்த உணவுகளின்  தரம் தொடர்பில் சந்தேகம் நிலவும் பட்சத்தில் அவை அரச ரசாயனபகுப்பாய்வுக்கு அனுப்பப்படும். எனவே பொதுமக்கள்  பண்டிகைக் காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!