பால் தேநீரின் விலை அதிகரிப்பு – News21 (Tamil)

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பை தொடர்ந்து, பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார்.

ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து ஒரு கோப்பை தேநீரின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு , 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Follow Us

Aha FM Logo

🎧 Listen Live on Aha FM

நன்றி

Leave a Reply

error: Content is protected !!