காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், எகிப்திற்குச் சென்றுள்ளார்.
இவ்விஜயத்தின் போது காஸாவில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்துவது தொடர்பாக எகிப்தின் ஜனாதிபதியுடனும், ஜோர்டான் மன்னருடனும் மெக்ரோன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விஜயத்தின் போது எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் உள்ள தந்தையொன்றையும் இம்மானுவேல் மெக்ரோன் சுற்றிப் பார்வையிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.