0
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள பிரிட்டிஷ் போர் விமானத்தை பழுதுபார்க்க நிபுணர்கள் வந்தனர். இங்கிலாந்தில் இருந்து 25 நிபுணர்கள் அட்லஸ் ZM417 வகை விமானத்தில் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்துள்ளனர். கேரளத்தை ஒட்டிய கடல் பகுதி மீது பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஜூன் 14ல் தரையிறக்கப்பட்டது. 5-ம் தலைமுறை எஃப் 35பி வகை விமானத்தில் ஏற்பட்ட கோளாறை ஆய்வு செய்ய பொறியாளர்கள் வந்துள்ளனர்.