புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று பொது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை  முன்னெடுத்திருந்தனர்.

இன்று முற்பகல் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புங்குடுதீவு மக்களால் இந்த போராடம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்,  தற்போதய நிருவாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிருவாகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் எனத் தெரிவித்திருந்ததோடு, கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் எதிர்வரும் 29ஆம் திகதி ஆலய நிருவக சபையினர் மற்றும் இன்று போராட்டத்தை முன்னெடுத்த மக்களையும் அழைத்து இது தெடர்பில் கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!