இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் ஜனாதிபதி செயலகம் அருகில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள தங்களுடைய பூர்வீக காணிகளை இழந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச மக்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் குறித்த ஆர்ப்பாட்டம் பங்கேற்றிருந்தார்.
இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ‘மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.