கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் தளுவ பகுதியில் நேற்றையதினம் பெருந்தொகையான உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை விஜய பிரிவின் கடற்படையினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, 31 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1142 கிலோ 700 கிராம் உலர் மஞ்சள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய குறித்த லொறியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.