ஃபேஸ்புக் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்ட விருந்து நிகழ்வில் பங்கேற்ற 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டனர்.
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று (22) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை உட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரளா கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த 03 பெண் சந்தேக நபர்களும் 14 ஆண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விருந்தில் கலந்து கொண்ட 12 யுவதிகளும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!