இப்பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன, 24 சுற்றுக்களை கொண்டதாக இம்முறை கிரோன்ப்ரீ போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் முதலாவது கிரோன்ப்ரீ அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது.
அப்போட்டியில் லெண்டோ நொரிஸ் வெற்றிப்பெற்றார். இரண்டாவது போட்டியில் ஒஸ்ட்ரோ பியாஸ்ட் வெற்றிப்பெற்று அசத்தினார். இந்நிலையில் 3வது குரொன்ப்ரீ போட்டி பெரும் எதிர்ப்பார்ப்புடன் ஜப்பானில் ஆரம்பமாகியது.
53 சுற்றுக்களை கொண்டதாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பமே முன்னனி வீரர்களின் ஆக்ரோஸமான தொடக்கத்துடன் சூடுபிடிக்க தொடங்கியது, மெக்ஸ் வெஸ்டாபன் முதலிடத்தில் போட்டியை தொடர்ந்தார். நொரிஸ் இரண்டாமிடத்தில் போட்டியை தொடர பின்கல வீரர்கள் சற்று தடுமாற்றத்தை எதிர்கொள்ள தொடங்கினார்கள்.
6வது சுற்றில் வைத்து ஹெமில்டன் 7மிடத்தை பெற கடுமையாக போராடினார். ஆதற்கு பலனும் கிடைத்தது. 22வது சுற்றில் வைத்து வெஸ்டாபன் மற்றும் நொரிஸ் பிட்ஸ்டொப் வாய்ப்பை பயன்படுத்தினார்கள், நொரிஸ் அவரை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேற முயற்சித்த நிலையில் வெஸ்டாபன் அதற்கு இடம் கொடுக்காமல் முந்தி சென்றார். பின்னரும் இருவரும் தங்களது நிலை தொடர்பில் கருத்துக்களையும் பறிமாறிக்கொண்டனர்.
30வது சுற்றில் வைத்து 9மிடத்திலிருந்த கார்லோ சைன்ஸ்சை பின்னுக்கு தள்ளி ஹட்கர் முன்னேறி செல்ல முயற்சித்தார். அவரால் அது முடியவில்லை. இந்நிலையில் 3மிடத்தில் சென்றுக்கொண்டிருந்த மெக்ஸ் வெஸ்டாபன் ஹெமில்டனை முந்திசெல்ல கடுமையாக போராடினார். இந்நிலையில் ஹட்கர் சைன்சை பின்னுக்கு தள்ளி ஜோராக 9மிடத்திற்கு முன்னேறி அசத்தினார். 42வது சுற்றில் வைத்து வெஸ்டாபன் முதலிடத்திலும் நொரிஸ் 2மிடத்திலும் பியாஸ்ட்ரி 3மிடத்திலும் சென்றுக்கொண்டிருந்தனர்.
வெஸ்டாபன் அந்த தருணத்தில் பிட்ஸ்டொப் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். பின்னர் 43வது சுற்றில் வைத்து இவர்களுக்கிடையில் போட்டி சூடுபிடிக்க தொடங்கியது. இந்நிலையில் 49வது சுற்றில் வைத்து நொரிஸ் மற்றும் பியாஸ்ட்ரிக்கிடையில் சிறிய இடைவெளியில் இரண்டாமிடத்திற்கான போட்டி நிலவியது இருந்தும் தனது இடத்தை விட்டுக்கொடுக்காமல் நொரிஸ் சிறப்பாக தனது வாகனத்தை செலுத்தினார்.
53வதும் இறுதியுமான சுற்றில் போட்டி முழூவதும் ஆதிக்கத்தை செலுத்திய மெக்ஸ் வெஸ்டாபன் போட்டி தூரத்தை 1 மணித்தியாலம் 30 நிமிடங்கள் 55 செக்கன்களில் போட்டி தூரத்தை நிறைவு செய்து ஜப்பான் குரொன்பீரியில் தொடர்ச்சியாக 4வது வருடமும் முதலிடத்தை பெற்று அசத்தினார்.
நொரிஸ் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டார். பியாஸ்ட்ரி 3மிடத்தை பெற்றுக்கொண்டார். ஓட்டுமொத்தமாக தனது 63வது குரொன்ப்ரீ வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மெக்ஸ் வெஸ்டாபன் என்பதும் குறிப்பிடதக்கது.