மட்டக்களப்பில் இன்றுமாத்திரம் 139 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்களும், வாகரையில் ஒரு தேர்தல் வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மாவட்ட அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற தேர்தலில் பொதுமக்கள் மிக ஆர்வத்துடனும் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்ற நிலையில் பிற்பகல் 4.30 மணிக்கு பிறகு 144 தெரிவு செய்யப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களில் தபால் மூல வாக்குகளும் அதன் பின்பு பொதுமக்களின் வட்டார வாக்குகளும் எண்ணப்பட உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!