140
திடீா் நெஞ்சுவலி் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது
எனினும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சு வலி இல்லை எனவும் நீர்ச்சத்து குறைப்பட்டால் ஏற்பட்ட சோர்வே எனவும் அவரது மகன் அமீன் விளக்கமளித்துள்ளாா்.
ஏ.ஆர்.ரஹ்மான் அவசர சிகிச்சை பிரிவில்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக சென்னை – அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்படுகின்றது. 58 வயதான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது வைத்தியர் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக தெரிவித்திருந்த அவரது மனைவி சாய்ரா பானு உடல்நலக்குறைவால் அவரை விட்டு பிரிவதாக தெரிவித்திருந்தார்.
மேலும் சாய்ரா பானுவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவியதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Discover more from SARINIGAR
Subscribe to get the latest posts sent to your email.