மழை காரணமாக போட்டி ரத்து; ஐபில் தொடரிலிருந்து வெளியேறியது கொல்கத்தா அணி!

நடப்பு ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றத்தால் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் புரிந்துணர்வு மேற்கொண்டதை அடுத்து கடந்த 17ஆம் திகதி முதல் மீண்டும் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.

இதன் படி பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றையதினம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்தது.

ஆனால் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதனால் பெங்களூரு அணி 12 போட்டிகளில் மொத்தம் 17 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடித்த நிலையில் 13 போட்டிகளில் 12 புள்ளிகளைப் பெற்ற கொல்கத்தா அணி தொடரை விட்டு வெளியேறியது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!