விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(26) முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
50,000 ரூபா பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணைகளில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தரமற்ற சேதனப்பசளை இறக்குமதிக்காக சட்டரீதியான அனுமதியைப் பெறுவதற்கு முன்னதாக நாணயக் கடிதத்தை விடுவித்தமையால் அரசாங்கத்திற்கு 130 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.